search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பயிர் சாகுபடி"

    மானிய விலையில் தோட்டக்கலை பயிர்களை சாகுபடி செய்யலாம் என்று ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் நடராஜன் தெரிவித்துள்ளார்.
    ராமநாதபுரம்:

    நீடித்த நிலையான வேளாண்மைக்கான தேசிய இயக்கத்தின் கீழ் ஒருங்கிணைந்த பண்ணைய முறைகள் மூலம் மானாவாரி பகுதிகளில் சாகுபடி பரப்பு அதிகரிக்கவும் விவசாயிகளின் வருமானத்தை பெருக்கும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    2018-19-ல் இந்த திட்டம் ரூ.19.74 லட்சத்தில் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் நிலத்திற்கேற்றார் போல் குழுக்கள் அமைத்து ஒருங்கிணைந்த பண்ணைய முறைகளை கடைப்பிடித்து இரட்டிப்பு லாபம் பெற வழி செய்யப்படும்.

    தோட்டக்கலை சார்ந்த பண்ணையத்தின் கீழ் விவசாயிகள் பழப்பயிர்களுடன் ஊடுபயிர், கலப்பு பயிர், பலஅடுக்கு பயிர் வழங்கப்படும். மேலும் குறைந்த காலத்தில் நிறைந்த வருவாயை ஈட்டித்தரவல்ல பசுமைக் குடில்கள் அமைக்கவும் மானியம் வழங்கப்படும்.

    விவசாய உற்பத்தி திறனை உயர்த்தும் நவீன தொழில்நுட்பங்களின் பலன்கள் மற்றும் செயல்பாடுகள் பற்றி பயிற்றுவிப்பதற்காக பயிற்சிகளும் அளிக்கப்படும்.

    இதனை பற்றிய தகவல் அறிந்து பயன்பெற ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள துணை இயக்குநர் அலுவலகத்தை அணுகியும், உழவன் செயலி மூலமாகவும், 04567-230832, 230328 என்ற தொலைபேசி எண்களிலும் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.

    மேற்கண்ட தகவலை ராமநாதபுரம் கலெக்டர் நடராஜன் தெரிவித்துள்ளார்.
    ×